incident near Virudhunagar .. Police investigation!

விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் நேற்று இரவு சந்தனகுமார் என்ற இளைஞரும், மணிகண்டன் என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவரும் கண்மாயில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அங்குவந்த சில மர்ம நபர்கள் இருவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக வச்சகாரப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில்,போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் உடல்களை விருதுநகர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறால் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாஅல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்உட்பட இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.