ராணிப்பேட்டைமாவட்டத்தைச்சேர்ந்தபுதுமணத்தம்பதியினர்திருமணம் ஆகிய நான்கு நாளிலேயே வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணத்தைச்சேர்ந்தவர் மனோஜ் குமார். மருந்து விற்பனை பிரதிநிதியானமனோஜுக்கும், தாம்பரம் பெருங்களத்தூரைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும் கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கார்த்திகா தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.திருமணத்திற்குப்பிறகு மறுவீட்டுக்கு பெருங்களத்தூர் சென்ற தம்பதியினர்காரில்திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் மாருதிகாரில்திரும்பிக்கொண்டிருந்தநிலையில் கூவம் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்த்திசையில் அரக்கோணத்திலிருந்துசென்னை நோக்கிசென்றுகொண்டிருந்தகான்கிரீட்கலவை இயந்திரம் கொண்ட லாரி வேகமாகசாலை வளைவில்வேகமாகத்திரும்பிய நிலையில்லாரிகட்டுப்பாட்டை இழந்து தம்பதிகள் வந்தகார்மீது விழுந்தது. இந்த விபத்தில்லாரியின்அடியில் சிக்கிய மாருதிகார் முழுவதுமாகநொறுங்கியது. விபத்துகுறித்துத்தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார்மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரபோராட்டத்திற்குப்பின் காரை உடைத்து அதில் சிக்கி உயிரிழந்துகிடந்த தம்பதியினரின் உடலைக்கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தில்லாரி ஓட்டுநர் தப்பித்த நிலையில் லாரி ஓட்டுநரைபோலீசார்தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதியிலுள்ளசிசிடிவிகாட்சிகளைபோலீசார்கைப்பற்றி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணம் ஆன நான்கே நாட்களில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.