Advertisment

பைக் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு- தூக்கி வீசப்பட்டதில் ஒரு இளைஞர் மின்கம்பியில் தொங்கியபடி பலி!

incident near nilakottai

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Advertisment

மதுரை பெருங்குடி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காமராஜ், அஜித் கண்ணன். இருவரும் நண்பர்கள் சிலருடன் தீபாவளி விடுமுறையைக் கழிக்க இருசக்கர வாகனங்களில் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். மீண்டும் மதுரை திரும்பும் போது நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி சிவன் கோவில் அருகே அவர்கள் வந்த பைக் மீது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காமராஜ் சம்பவ இடத்தில் பலியானார். அதேவேளையில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட அஜித் கண்ணன் பல மீட்டர் உயரே சென்று மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் தொங்கினார். இந்த கோர விபத்து, உடன் வந்த நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisment

accident

உடன் வந்தவர்கள் நண்பர்களின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மின்னழுத்த கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த அஜித் கண்ணன் உடலை மீட்ட நிலக்கோட்டை போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

incident nilakottai Two wheeler
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe