கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வெள்ளாற்று கரையோர கருவேல முட்புதரில் புவனகிரி பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் சீனிவாசன் வயது 26 செவ்வாய்க்கிழமை அதிகாலை கழுத்து இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

Murder near Bhuvanagiri! body throwed in blows in barbed

அதன்பேரில் சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான புவனகிரி ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினர் நண்பர்கள் இரவில் மது குடித்துவிட்டு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பெண் சார்ந்த தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளார? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.