திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழில் செய்யும் 24 வயது இளைஞர் வடிவேல். தை பொங்கலன்று நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் எனச்சொல்லிவிட்டு சென்றவர், அன்றிரவு வீட்டுக்கு வரவில்லை. மறுநாளும் வராததால் அவரது குடும்பத்தார் பலயிடங்களில் தேடத்துவங்கினர்.
நாயனசெருவு கிராமத்திற்கு கொஞ்சம் தொலைவில் உள்ள கொள்ளலாம் கொல்லி வனப்பகுதியில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் வடிவேல் இறந்து போயிருப்பதை கண்டு சிலர் சொல்ல, வடிவேல் பெற்றோர்கள் சென்று பார்த்து கதறி அழுதனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நண்பர்களுடன் வெளியே சென்றவன் இப்படி இறந்து கிடக்கிறானே என அழுதவர்கள் இதுப்பற்றி திம்மம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அவர்கள் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா அல்லது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என திம்மம்பேட்டை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.