incident in namakkal... police investigation

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (21). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அப்போது ஆசைவார்த்தை கூறி மாணவியை சத்யமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில நாள்களாக மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவர், தன்னை சத்யமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து 18 வயது நிரம்பாத சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததால் சத்யமூர்த்தி மீது காவல்துறையினர் போக்ஸோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Advertisment