Advertisment

குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம்; புதுக்கோட்டை காவல்துறை திடீர் அறிக்கை

 Incident of mixing human waste in drinking water; Pudukottai Police Sudden Report

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பகுதியில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணை வெளிப்படைத்தன்மையுடன்நேர்மையாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி நேர்மையாகவும் ஒளிவு மறைவின்றியும் முழு முயற்சியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நாள்வரை இந்த வழக்கு தொடர்பாக வெள்ளனூர் காவல்நிலையத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த 36 சாட்சியங்களும், பிற சமூகத்தைச் சேர்ந்த 49 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு மொத்தம் 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடம் மட்டுமே போலீசார் விசாரணை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் புதுக்கோட்டை காவல்துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

incident police Pudukottai Untouchability
இதையும் படியுங்கள்
Subscribe