Advertisment

டிக் டாக்கில் மூழ்கியிருந்த 16 வயது சிறுமி கடத்தல்... போக்ஸோவில் ஒருவர் கைது!! 

incident in mayiladuthurai

Advertisment

மயிலாடுதுறை அருகே டிக் டாக்கில்மூழ்கியிருந்த 16 வயது சிறுமி இளைஞர் ஒருவரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமி டிக் டாக் செல்போன் ஆப்-ல்பாடுவது, நடனம் ஆடுவது என அதிலேயே மூழ்கி இருந்த நிலையில், கடந்த ஆறாம் தேதி அச் சிறுமிதிடீரென காணாமல் போயுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க,போலீசார் சிறுமி காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வந்தனர்.

விசாரணையில் அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞர்சிறுமியை கடத்தியது தெரியவந்தது. அந்த சிறுமியுடன் ஏற்கனவே டிக் டாக்கில் பழகிஇருந்தசஞ்சய்குமார், தனது நண்பர்களின் உதவியுடன் 16 வயது சிறுமியை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

Advertisment

கடத்தி செல்லப்பட்ட சிறுமியை மீட்ட காவல்துறையினர், சஞ்சய்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததோடுசஞ்சய்குமார் சிறுமியை கடத்த உதவியநபர்களை தேடி வருகின்றனர்.

tik tok police Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe