
மரண்டஹள்ளி பகுதியில் மனித கழிவுகளை கைகளால் அள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் மரண்டஹள்ளி பகுதி அம்பேத்கர் நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது. அந்த கழிப்பிடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டது. அப்பொழுது மனித கழிவுகளை கைகளால் அள்ள வைத்ததாக புகார் அளித்தது. அது தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக தேசிய தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.