திருச்சி சிறைத்துறை காவலர் ராஜ்குமாருக்கும் தனியார் பள்ளி ஆசிரியை சித்ராவுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டு திருமணதிற்குநான்கு நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை தங்கும்விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சித்ரா. 30 வயதான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா சிறுபுலியூரைச் சேர்ந்த துரைசாமி மகன் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். ராஜ்குமார் தமிழ்நாடு சிறப்பு காவல்படை திருச்சி நம்பர் ஒன் பட்டாலியனில் இருந்த அவர்தற்போது மத்திய சிறை காவலராக பணியாற்றி வருகிறார்.

incident in mailatudurai;police investigation

இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயம் முடிந்து இன்னும் நான்கு நாட்களில் கொல்லுமாங்குடியில் திருமணம் நடக்க இருக்கிறது.

Advertisment

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியும், சண்டைப்போட்டும், சண்டையோடு அடிக்கடி வெளியில் சுற்றிக்கொண்டும் இருந்துள்ளனர். சித்ராவின் வீட்டிற்கு ராஜ்குமார் அடிக்கடி வருவதும், சித்ராவை அழைத்துக்கொண்டு ஒன்றாக ஊர் சுற்றுவதும் வாடிக்கையாகவே இருந்துள்ளார். அந்த வழக்கத்தில் சுதந்திர தினத்தன்று ராஜ்குமார் சித்ரா வீட்டிற்கே சென்று சித்ராவை அழைத்துக்கொண்டு வேலைப்பார்க்கும் திருச்சிக்கு சென்று அங்குள்ள மாநகராட்சி லாட்ஜில் இருவரும் தங்கியுள்ளனர். மறுநாள் காலை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறி சித்ராவின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்சென்று பெண் வீட்டில் கொடுத்திருக்கிறார். இதைக்கண்ட அவரது பெற்றோர்கள் பதட்டமடைந்து வீதியில் விழுந்து புரண்டனர்.

சித்ராவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்களும், கிராமத்தினரும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் நடந்தது திருச்சி கண்டோன்மென்ட் பகுதி என்பதால் கண்டோன்மென்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழகர் தலைமையில் போலீசார் மயிலாடுதுறை வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

incident in mailatudurai;police investigation

Advertisment

இதுகுறித்து மகாராஜபுரம் சேர்ந்த அவரது உறவினர்கள் கூறுகையில்," ஆரம்ப முதலே அந்தப்பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் கிடையாது. சித்ரா வேறு ஒரு பையனை திருமணம் செய்ய நினைத்து காதலித்திருக்கிறார். அதை தெரிந்தே சித்ராவின் அம்மா இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நிச்சயம் முடிந்ததிலிருந்து ராஜ்குமாரக்கும், சித்ராவிற்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சித்ராவை மனமாற்றம் செய்யவும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும்தான் திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்ராஜ்குமார். லாட்ஜ் அறையில் தனியாக விட்டுவிட்டு பணிக்கு போய்ட்டதா சொல்லுறாங்க, அப்படின்னா தனியா இருக்கும்போது ஏற்பட்ட மன அழுத்த விரக்தியால சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது சித்ரா விரும்பிய பையனால் நடந்ததா, அல்லது ராஜ்குமாரை கொன்றுவிட்டு நடிக்கிறாரா என்பது புரியல. திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்காமல். 120 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சித்ரா விட்டிற்கு உடலை கொண்டுவந்தது ஏன்னு புரியல. சித்ராவின் சாவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துது, நியாயம் தெரியனும்." என்கிறார்கள்.

சித்ராவின் மரணத்திற்கு ராஜ்குமாரின் டார்ச்சரா, வேறு நபரால் இந்த மரணம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகே பல உண்மைகள் தெரியவரும் என்கிறது போலீஸ் தரப்பு.

.