Advertisment

வாபஸ் வாங்கச் சொல்லி வேட்பாளரின் கடைக்கு தீவைத்த வேட்பாளர்?!

மதுரை அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூர் காலனியை சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவர் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அதேபகுதியில் மாரியப்பன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மாரியப்பன் ஆண்டியிடம் வேட்புமனுவை வாபஸ் வாங்க சொல்லி தொடர்ந்து அச்சுறுத்தியும், நேரில் வந்து மிரட்டியும் வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் ஆண்டியப்பன் மனுவை வாபஸ் பெற்றார். இருந்தும் இரவு 10 மணி அளவில் ஆண்டியப்பனுக்கு சொந்தமான பெட்டிக் கடையை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

Advertisment

IN

இதில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். என்னை மிரட்டிய எதிர்த்தரப்பு வேட்பாளரான மாரியப்பன்தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும். அவர் கூட்டாளிகளும் சேர்ந்து என்னை தொடர்ச்சியாக மிரட்டி வந்தனர். நான் வாபஸ் வாங்கியது அவர்களுக்கு சரியாக தெரியவில்லை என்று நினைக்கிறேன் தெரியாமல் என் கடையை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து புகார் கொடுத்துள்ளேன். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று போலீஸில் புகார் அளித்துள்ளேன் நம்மிடம் கூறினார். இது அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

case local election madurai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe