
மதுரையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலியைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30). இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மதுரையில் உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் தங்கி கிருஷ்ணகுமார் வெல்டிங் வேலை செய்து வந்தார். இன்று மதிய சாப்பாட்டிற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் மீது கார் ஒன்று மோதியது. அப்போது திடீரென காரில் இருந்து இறங்கியஐந்து பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கிருஷ்ணகுமாரை ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத்தப்பி ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு கிருஷ்ணகுமாரை கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us