Advertisment

அடுத்தடுத்து துயரம் தந்த மகள்கள்... விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட தந்தை!

incident in madurai

Advertisment

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே இரண்டு மகள்கள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை மூன்றாவது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுமலை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மூன்று மகள்கள் இருந்த நிலையில், இரண்டு மூத்த மகள்கள் தொடர்ந்து காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகளான அர்ச்சனா காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அழகுமலை மனமுடைந்திருந்த நிலையில் இவரது இரண்டாவது மகளும் அண்மையில் காதல் விவகாரம் தொடர்பாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் விரக்தியிலிருந்துள்ளார் அழகுமலை. இந்நிலையில் கல்லூரிக்குச் சென்ற இளைய மகளான மூன்றாவது மகளை வீட்டிற்கு அழைத்து வந்த அழகுமலை அவரது மனைவி மற்றும் மூன்றாவது மகள் என மூன்று பேரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் தந்தை அழகுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயும், மகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

incident madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe