மதுரையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இவரது கடைக்கு 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று தினமும் கடன்சொல்லி டீ குடித்துவந்தது. இப்படி சில நாட்கள் செல்ல அந்த கும்பலிடம் இனி கடனை அடைத்தால்தான் டீ தருவேன் எனக்கூறியுள்ளார் மாரிமுத்து.

Advertisment

incident in madurai... police investigation!

இதுதொடர்பாக சிலநாட்களாக அந்த கும்பலுக்கும், மாரிமுத்துவுக்கும் மோதல் ஏற்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை கடைக்குவந்த அந்த கும்பல் மீண்டும் டீ வேண்டும் எனவம்பாக கேட்க, இல்லை கடனை அடைத்தால்தான் டீ என மறுத்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் கொண்டுவந்த கத்தியால் மாரிமுத்துவைகொலை செய்துவிட்டு தப்பியோடினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவதற்குள் அந்த கும்பல் ஓட்டம் பிடித்தது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் தல்லாகுளம் போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாகசந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.