பெரும்பாலானோர் குரல் கொடுத்துவரும் முக்கியமான பிரச்சனைகளில் சிலர் சீரியஸாக மூழ்கிவிடுகின்றனர். தங்களின் குமுறலை வெளிப்படுத்துவதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றனர். மதுரை கூடல் புதூரைச் சேர்ந்த காந்தியும் அப்படித்தான். ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது அவருடைய ஆதங்கமாக இருந்தது. அதனைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். எப்படி தெரியுமா? ‘ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் கால தாமதம் செய்கிறார் கவர்னர். எனவே, கவர்னர் பதவியை எனக்கு வழங்க வேண்டும்.’ என்று தெரிவித்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajbhavan_2.jpg)
காந்தியின் முகநூல் பக்கத்தில் பதிவான கவர்னர் பதவி கோரிக்கையைப் பார்த்த ஒருவர் ‘தமிழகத்தில் ராஜ்பவன் என்பது கண்ணியமான கனவான்கள் அமரும் இடமாயிற்றே! கவர்னர் பதவி என்பது மேன்மை மிகுந்ததாயிற்றே!’ என்று சிந்தனைவயப்பட்டு, கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பிறகென்ன? வழக்கு பதிவு செய்து காந்தியைக் கைது செய்துவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)