மதுரை குன்னத்தூரில்ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர்ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரின் உடலையும் வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வீடுகள் தற்போது சூறையாடப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதிதற்போதைய ஊராட்சி செயலர் பால்பாண்டி ஆகிய இருவரின் வீடுகளையும் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக தற்போது அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர் கொலையைத் தொடர்ந்து வீடு நொறுக்கப்பட்ட சம்பவத்தால் தற்போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.