ADVERTISEMENT

நாங்க பாஸா? இல்லையா? -காதில் பூவைத்து அரியர் மாணவர்கள் போராட்டம்!!

04:49 PM Sep 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில், அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நேற்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும தலைவர் அனில் சகஸ்ரபுதே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது எனத் தெரிவித்திருந்தார்.

அரியர் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையின்போது ஏ.ஐ.சி.டி.இ தனது முடிவைத் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதில், தொடர்ந்து குழப்பம் நிலவுவதாகச் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்தபடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு கூறியிருக்கும் நிலையில் நாங்க பாஸா இல்லையா? தேர்ச்சி தொடர்பாக மாணவர்களைக் குழப்ப வேண்டாம் எனவும், இது சம்பந்தமாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை முன்வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT