Advertisment

சிறுத்தை உயிரிழந்த சம்பவம்... ஓ.பி.ரவீந்திரநாத்தின் நிலத்தின் மேலாளர்களிடம் வனத்துறை விசாரணை

ops

Advertisment

வனத்தை ஒட்டிய நிலப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் நிலத்தின் மேலாளர்களை கைதுசெய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 27ம் தேதி அந்த தோட்டத்தில் சிக்கிய இரண்டு வயது சிறுத்தை புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வனப்பாதுகாப்பு அலுவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய அந்த சிறுத்தை புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது.

இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்கு தற்காலிக கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், ‘நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிக கிடை அமைத்தவரை கைது செய்வதா?' என கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் வனத்துறை தங்களை காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஓ.பி.ரவீந்திரநாத்தின் நிலத்தின் மேலாளர்கள் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

leopard ops RAVEENDRANATH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe