incident in kuntrathur

Advertisment

சென்னையை அடுத்த குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்டு வந்த வீட்டின் உரிமையாளரை ஓடஓட கத்தியால் தாக்கி, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த குணசேகரன் என்பவருக்குகுன்றத்தூரில் சொந்த வீடு ஒன்று இருந்தது. அதனை அவர் வாடகைக்கு விட்டிருந்த நிலையில், குன்றத்தூரில் இருந்த அந்த வீட்டில் அஜித் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கியிருந்தார். இந்தநிலையில்கரோனா ஊரடங்குகாரணமாக கடந்த நான்கு மாதங்களாக அஜித் வாடகை கொடுக்காததால் குணசேகரன் அடிக்கடி தொடர்பு கொண்டு வீட்டு வாடகை கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு சென்றகுணசேகரன் அஜித்திடம் வாடகை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.அப்போது கையில்மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித் வீட்டு உரிமையாளர் குணசேகரனைதாக்க, அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்பொழுதும்விடாமல் துரத்தி சென்ற அஜீத், குணசேகரனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் இந்த சம்பவத்தில் வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.