Incident in krishnagiri

கிருஷ்ணகிரியில் மகளின் காதலைக் கண்டித்து மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அம்சவேணி என்பவரும் அவரது மகன் விஷ்ணு (13), மகள் திரிஷா (17) ஆகிய மூவரும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தாயுடன் கிணற்றில் குதித்த மகள் திரிஷா உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய் அம்சவேணியும், மகன் விஷ்ணுவும் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்த சம்பவத்தில் தாய் அம்சவேணியின் மூத்த மகள் பிரியாவுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், அவரது காதல் விவகாரம் தெரியவந்ததால் தாய் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக பிரியாவின் காதலுக்கு தாய் அம்சவேணி எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் திருப்பதி என்பவருடன் பிரியா நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் இன்று தாயும் மகனும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment