Incident in koyambedu

Advertisment

கோயம்பேட்டில் நண்பனை கொலை செய்த ரவுடியை பழிவாங்குவதற்காக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு மந்தைவெளி தெரு பகுதியில் பழிக்குப் பழியாக ரவுடி ராஜ்குமார் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவுடி ராஜ்குமார் தனது நண்பனை கொலை செய்ததால் அவனை பழிவாங்குவதற்காக திருவேற்காடு பிரகாஷ், கண்ணன் ஆகியோர் ரவுடி ராஜ்குமாரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் திருவேற்காடு பிரகாஷ், கண்ணன் ஆகிய இருவரைப் பிடிப்பதற்காக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பனை கொலை செய்ததற்காக பழிக்குப் பழி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.