Skip to main content

கொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்;போலீசார் விசாரணை!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

கோவை அருகே மளிகை கடைக்குள் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.கொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை அடுத்த கருமத்தம்பட்டி மயிலேரிபாளையம் பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் 50 என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தேவகி (45) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பிள்ளைகள் சொந்த ஊரில் உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கடைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. 

 

kovai

 

சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அப்போது மளிகை கடைக்குள் பெண் ஒருவர் காது அறுபட்ட நிலையில் உடலில் பலத்த காயங்களுடன் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் நேற்றிரவு தேவகி கடைக்குள் படுத்து இருந்ததாகவும், கொள்ளையடிக்கும் நோக்கில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தேவகியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை திருடி சென்றதும் தெரியவந்தது. மர்ம நபர்கள் தாக்கியதில் தேவகி பலியாகிவிட்டார். இந்தகொலையை மறைக்க அவர்கள் கடைக்கு தீ வைத்து எரித்து விட்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.