கடந்த மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்புபடித்து வரும் மாணவி தனது பிறந்தநாள் அன்று காதலனுடன் ஒரு பூங்காவிற்கு சென்று உள்ளார்.

Advertisment

அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் காதலனை சகட்டுமேனிக்கு அடித்துவிட்டு மாணவியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, பின்பு ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

Advertisment

incident in kovai... police arrest 6 th person

புகாரை விசாரித்த போலீஸ் நாராயணன், ராகுல், கார்த்திக் மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

மேலும் இரண்டு பேரை தேடிவந்த நிலையில் தேடப்பட்டு வந்த 5 வதுகுற்றவாளி மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். மேலும் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளி பப்ஸ் கார்த்திக்கை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தொடர்ந்து கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாலியல் சீண்டலுக்கு பெருமளவில் பெண்கள் உள்ளாக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்று.