Advertisment

அதே இடத்தில் மீண்டும் 'தீண்டாமை சுவரா?' - நெஞ்சை உலுக்கிய சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுநாள்!!

incident in kovai mettupalayam  Memorial Day

Advertisment

கடந்த ஆண்டு இதேநாள் கோவை, மேட்டுப்பாளையம் நடுவூரில்ஆதிதிராவிடர் காலனியில் பெய்த கனமழையில், வீட்டின் மிகப்பெரிய சுற்றுச்சுவர் இடிந்து, ஒட்டியிருந்தஓட்டு வீடுகள் மீது விழுந்தது. இந்தவிபத்தில்,வீட்டில்தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கியது இந்தச் சம்பவம்.

incident in kovai mettupalayam  Memorial Day

இடிந்து விழுந்தது'தீண்டாமை சுவர்' எனஅப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிய நிலையில்,பல்வேறு அரசியல் தலைவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லினர். அந்த நேரத்தில் பெற்றோர்களை இழந்தசிறுமி ஒருவர்''எங்களுடைய அப்பா இந்த விபத்தில்இறந்துவிட்டார். எங்களுடைய புத்தகங்களும் விபத்தில்சிக்கிவிட்டது. எங்களுக்குப் படிக்க ஏற்பாடு செய்தால், எப்படியாவது படிச்சுஎன் அம்மாவகாப்பாத்திப்புடுவேன்''எனக் கண்ணீர்மல்ககூறியது அனைவர் மனதையும்நனைத்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாகஒரு வருடம் கழிந்துவிட்டது.

Advertisment

incident in kovai mettupalayam  Memorial Day

இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த17 பேரின்முதல் நினைவுநாள்இன்று அங்கு அனுசரிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் காலனி பகுதிக்குள் நுழைய தடைவிதித்திருந்ததால், தனித்தனிக் குழுவாகச் சென்றஅரசியல் கட்சியினர் மற்றும்சமூகஇயக்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். மேலும்,சுவர்இடிந்துவிபத்து ஏற்பட்டஇடத்தில் மீண்டும் சுவர் எழுப்பப் பட்டுள்ளதை எதிர்த்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100 -க்கும் மேற்பட்டோர்தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டநிலையில், கைது செய்யப்பட்டனர்.அதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

humanity incident kovai mettupalayam
இதையும் படியுங்கள்
Subscribe