வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு... பெண் பார்க்க சென்றுவிட்டு திரும்புகையில் நிகழ்ந்த சோகம்!

Incident in kovai

கோவை அருகே மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ்-ராஜம்மாள் தம்பதியினர். இவர்கள் அவர்களது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக ஆம்னி வேனில் இன்று உறவினர்களுடன்வடுகபாளையம் சென்றுள்ளனர்.பின்னர் வீடு திரும்புகையில்பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வண்டியை நிறுத்தியுள்ளனர். அப்பொழுது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் சென்ற ஆம்னி மீது மோதியது. இந்த விபத்தில் ராஜாம்மாள் மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident kovai police
இதையும் படியுங்கள்
Subscribe