ADVERTISEMENT

கரோனா பாதித்தவரை குணமாகியதாக வீட்டிற்கு அனுப்பிய மருத்துவமனை!

04:00 PM Aug 14, 2020 | kalaimohan

ADVERTISEMENT


கோவை, கிருஷ்ணா நகர் சொக்கமுத்து வீதியைச் சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு குணமடைந்ததாகச் சொல்லி மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே வீசிங் வந்து விட்டதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 4 மணி நேரத்துக்கும் மேலாக நள்ளிரவில் காக்க வைத்துள்ளது மருத்துவமனை.

இதற்கிடையே அவர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அனுமதிக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கரோனா நோய்த்தொற்று குணம் ஆகாமலே குணமடைந்து விட்டதாகச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு சர்க்கரை நோயும் உள்ளது. இதற்கிடையே வீசிங் பிரச்சனையும் இரவு ஏற்பட்டது. மீண்டும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்க காவல்துறையை அணுகி, இன்று அதிகாலை நான்கு மணிக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்த்தோம். இதுபோல அலட்சிய சம்பவங்கள் நடைபெறாத வகையில் சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக் கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT