Skip to main content

ரயில் தண்டவாளத்தில் மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் விபத்தில் பலி! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

கோவை அருகே ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை சேர்ந்தவர் பீர் முகமது. இவரது மகன் சித்திக் ராஜா வயது 22 இவர் கோவை சூலூர்அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு சிவில் படித்து வந்தார். இவருடன் படித்து நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் 22, தேனியை சேர்ந்த விஷ்னேஷ 22 இவர் அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் இன்ஜினியரிங் மெக்கானிக் படித்து முடித்திருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி 22 ,கவுதம் 21 ஆகியோர் நடந்து முடிந்த தேர்வில் தோல்வி அடைந்தனர்.

 

incident in kovai...


தோல்வி அடைந்த பாடத்தில் மறுதேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர். தேர்வு முடிந்ததும் இந்த ஐந்து பேரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. பீர் முகம்மதுவின் அறைக்கு சென்ற 5 பேரும், மீண்டும் மது அருந்துவதற்காக ராவுத்தர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர். டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு நேரமாகிவிட்டதால் மதுபாட்டில்களை வாங்கியவர்கள் அதே பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது.  அப்போது  கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததை, அறியாத அளவிற்கு போதை தலைக்கேறிய நிலையில் இருந்துள்ளனர். அப்போது  ரயில் வருவதை பார்த்த விஸ்வனேஷ் என்பவர் மட்டும் தப்பிவிட்டார் . கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மற்ற நால்வர் மீதும் மோதியதில் உடல் துண்டாகியும், தூக்கி வீசப்பட்டும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்