Advertisment

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து; பயணிகள் காயம்

incident on Kodaikanal Hill Pass Passenger issue

கொடைக்கானல் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லக்கூடிய மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் டம்டாம் பாறை என்ற இடம் உள்ளது. இங்கு கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயம் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் டம்டாம் பாறை அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மாயமான பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

bus kodaikanal lorry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe