karur incident

கரூரில்இளைஞர்ஒருவர் காதல்விவகாரத்தில் நடுரோட்டிலேயே வைத்து கத்தியால்குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் வஞ்சியம்மன் கோவில்தெருவைச்சேர்ந்தவர் ஹரிகரன். 23 வயதாகும்ஹரிகரன், அந்தப்பகுதில் சலூன் கடையொன்றைநடத்தி வருகிறார். அதேபகுதியில் உள்ளவேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை,ஹரிகரன் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கரூரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்குகாதலி, ஹரிகரனை சந்திக்கஅழைத்துள்ளார். காதலியின் அழைப்பின்பேரில் அங்கு சென்றஹரிகரன் காதலியுடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த10-க்கும் மேற்பட்ட நபர்கள், ஹரிகரனை கத்தியில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஹரிகரன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைபலனிற்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம்தொடர்பாக போலீசார்4 பேரை முதல்கட்டமாக கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். காதலியைச்சந்திக்கச்சென்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டசம்பவம் அந்தப் பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment