கரோனோ தொற்று பரவலைதடுக்கும் வகையில், ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் விரக்தி அடைந்த குடிமகன்கள் ஆங்காங்கே கிடைக்கும் மதுவினை கூடுதல் விலைக்கு வாங்கி குடித்து வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AFDSDSDSFS.jpg)
சில நாட்கள் கழித்து, கூடுதல் விலைக்கு மது கிடைக்காததால் குடிமகன்கள் கவலையுடன் இருந்தனர். இந்த நிலையில் கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர் முக கவசத்துடன் குடிமகன்கள் நடமாடும் பகுதிக்கு வந்து குவாட்டர் 300 ரூபாய்க்கு உள்ளது, வேண்டும் என்பவர்கள் உடனேவாங்கிக்கோங்க என்று அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.
இதனை நம்பிய சில குடிமகன்கள் தலா ரூபாய் 300 கொடுத்து ஆசையாய் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி இருக்கிறார்கள். மதுவைசைடிஸ் உடன் சாப்பிடலாம் என்ற ஆசையில் சைடிஷ் வாங்கிக்கொண்டு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்று பாட்டிலைத் திறந்து வாயில் ஊற்றியபோது, அது வெறும் டீ சாயம் கலந்தமதுஎனதெரிந்தது.
இதனால் ஏமாற்றத்துடன் குடிமகன்கள் ஆத்திரமடைந்து அந்த நபரை தேடிவருகின்றனர். பத்து நிமிடத்தில் டீ சாயம் கலந்து, மது என ஏமாற்றி ரூபாய் 3000 சம்பாதித்து கல்லாக்கட்டிசென்ற சம்பவம் கரூர் ராயனூர் தாந்தோணிமலை பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_181.gif)