
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை கனமழை பெய்து வரும் நிலையில், நீர் நிலைகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ததால் பல நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள நீர்ப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ளதைப் பார்த்து அதே ஊரைச் சேர்ந்த தங்கையா என்பவரின் மகன் அசோக்(20), மாரிமுத்து என்பவரின் மகன் கண்ணன் (20) இருவரும் டிப்ளமோ படித்தவர்கள். குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி சடலங்களை மீட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)