Advertisment

கடித்து துன்புறுத்தப்பட்ட 7 வயது சிறுவன்... கன்னியாகுமரியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

incident in kanyakumari

Advertisment

தாயும், தாயின்இரண்டாவது கணவரும் சேர்ந்து 7 வயது சிறுவனைகடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கஞ்சாம்புறம்பகுதியைசேர்ந்த சசிகலா என்பவரின் கணவர் அலெக்சாண்டர். கடந்த ஆண்டுஅலெக்சாண்டர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தது. மூன்று குழந்தைகளில் இரு குழந்தைகளை சசிகலா அவரது தங்கை வீட்டில் விட்டுவிட்ட நிலையில், 7 வயது மகனுடன் வசித்து வந்த சசிகலா, முருகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவனை சசிகலாவும், அவரதுஇரண்டாவது கணவரான முருகனும்அடித்து துன்புறுத்தியதோடு சிறுவனின் உடலில் பல இடங்களில் கடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சிறுவனுடைய கை, தோள்பட்டை, தொடை பகுதிகளில் ரத்தம் வெளியாகும்அளவுக்கு ஆழமாக ஏழு வயதுச் சிறுவனை கடித்துள்ளார் முருகன்.இதை அறிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும் இது தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 7 வயது சிறுவன்தாய் மற்றும்தாயின் இரண்டாவது கணவரால் கடித்து துன்புறுத்தப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident Kanyakumari
இதையும் படியுங்கள்
Subscribe