Incident at kanyakumari

கன்னியாகுமரிமாவட்டம், பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு அபிநயா என்ற மகள் இருந்தார். அபிநயா, அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அபிநயாவும், ஒரு இளம்பெண்ணும் மாத்தூர் தொட்டிபாலத்தில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது அபிநயா, செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அபிநயா, பாலத்தில் இருந்து கீழே குதித்தார். சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அபிநயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இதனை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவட்டா போலீசார் விரைந்து சென்று அபிநயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அபிநயாவும், 17 வயது சிறுமி நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். தோழியின் ஏற்பட்ட பழக்கத்தால், அந்த சிறுமியின் பெயரை அபிநயா தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

Advertisment

இதனிடையே, அந்த சிறுமி ஒரு வாலிபரை காதலிக்க தொடங்கியதால், அபிநயாவை விட்டு விலகி சென்றுள்ளார். இதில் மனமுடைந்த அபிநயா, அவருடன் செல்போனில் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்து தான், அபிநயா பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.