incident in kanjipuram

Advertisment

கஞ்சா போதையில் இளைஞன் ஒருவன் 70 வயது மூதாட்டி ஒருவரையும் அவரின்5 வயது பேரனையும்அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைஅடுத்தபட்டுநூல்சத்திரம்என்ற கிராமத்தில் வசித்துவரும்யுவராஜ் என்ற இளைஞன் கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்று கூறப்படுகிறது. அடிக்கடி கஞ்சா புகைத்துவிட்டுதலைகால் நிற்காத போதையில் அந்த பகுதியில் வருவோர் போவோரிடம் சண்டை இழுப்பது மட்டுமல்லால்போதையில் கண்முடித்தனமாக தாக்கும் பழக்கமும் அவனுக்குஇருந்துள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கஞ்சா புகைத்துவிட்டுவீட்டுக்கு வந்த யுவராஜ் பக்கத்துவீட்டுவாசலில் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டிருந்த70 வயது மூதாட்டி ஒருவரை தரதரவென இழுத்துச் சென்று வீட்டில் இருந்த அரிவாளால் கொடூரமாகத்தங்கியுள்ளான். பாட்டியின் சத்தத்தைக் கேட்ட மூதாட்டியின் 5 வயது பேரன் வீட்டிற்குள் ஓடி வர, சிறுவனையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளான். பின்னர் இருவரையும் உள்ளே வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யுவராஜ் சென்றுவிட்டான். மூதாட்டி மற்றும் சிறுவனின்அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டைத்திறந்து பார்க்கையில் வீடு முழுவதும் ரத்தம் தெறித்துக் கிடந்தது. உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தில் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா போதை இளைஞன்யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.