
காஞ்சிபுரத்தில்வேலைதேடி வந்த இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல்கூட்டுப்பாலியல்வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகாஞ்சிபுரத்தைச்சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் முன்பின் தெரியாத குணசீலன் என்பவர் அறிமுகமாகி வேலை வாங்கித்தருவதாகத்தெரிவித்துள்ளார். வேலை தயாராக இருப்பதாகவும் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்றால்தான் வேலை உறுதியாகும்எனக்கூறியதால் கடந்த ஒன்றாம் தேதி குணசீலனைநம்பி அந்த இளம்பெண்காரில்சென்றுள்ளார். செல்லும் வழியில் குணசீலனின் நண்பர்கள் குணசேகரன், காமராஜ்,ஜெபநேசன்ஆகியோர்காரில்ஏறியுள்ளனர். அப்பொழுது அந்தபெண்ணிற்குக்குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதில் மயக்க மருந்து கலந்ததுதெரியாமல் இளம்பெண்ணும்அந்தகுளிர்பானத்தைக்குடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்துமயக்கமடைந்த அந்த பெண்ணை ஐந்து பேரும்கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். தனக்கு நேர்ந்தபாலியல் வன்கொடுமைதொடர்பாகப்பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரைபோலீசார்தேடி வருகின்றனர். வேலைதேடி வந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்கமருந்துகொடுத்துக்கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனகாவல்துறைஅறிவுறுத்தியுள்ளனர்.
Follow Us