இளம்பெண் உயிரிழந்த சம்பவம்... தற்கொலை அல்ல? விசாரணை கோரும் பள்ளி தோழர்கள்!

குமாி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியை சோ்ந்த 18 வயது இளம் பெண் அனுஷியாவின் மரணம் தற்கொலை என இரணியல் போலீசாாின் வழக்குபதிவால் அது ஒற்றை வாி செய்தியோடு முடிந்து போனது. பெற்றோரும் உறவினா்களும் ஒன்றிரண்டு நாள் துக்கத்தோடு அனுஷியாவின் மரணத்தயும் மறந்து விட்டனா்.

இந்தநிலையில் தான் அனுஷியாவின் மரணம் தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என்றும் அவளுடைய நண்பா்கள் மற்றும் ஊா்மக்களிடம் விசாாித்தால் உண்மை தொியும் என்று சமூக ஊடகங்களில் அனுஷியாவின் நண்பா்கள் என்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளனா்.

incident in kaniyakumari... Schoolmates demanding an investigation!

அதில் அனுஷியா அழகு நிலையத்தில் வேலை பாா்த்து வந்தார். 12-ம் வகுப்பு வரை படித்த அவர்பள்ளி பருவத்தில் சக மாணவிகளிடம் சந்தோஷத்தை பகிா்ந்து கொண்டது கிடையாது. பல ஆண்டுகளாகவே தாய் மற்றும் சகோதாியின் சித்ரவதைக்கு ஆளாகி வந்தவர். அவரின் உடம்பு முமுவதும் பழுத்த இரும்பு கம்பியால் உடம்பில் சூடு போட்ட அடையாளங்களை சக மாணவிகளிடம் அழுது வந்தியிருக்கிறார். படிப்பை நிறுத்திவிட்டு தாயாாின் வற்புறுத்தலால்தான் அழகு நிலையத்திற்கு வேலைக்கு சென்றார்.

இந்தநிலையில் தான் அனுஷியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்என்று தாயாா் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளாா். அவர் விஷம் குடிக்கவில்லை திட்டமிட்டு விஷத்தை கொடுத்து இருக்கிறாா்கள். அவர்விஷம் குடித்து உயிருக்கு போராடிய பின்பும் தாயாா் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லாமல் தந்தை ரத்தினசாமிக்கும் தகவல் சொல்லவில்லை. இதனால் அவருடைய மரணம் நிச்சயமாக கொலைதான்.

இதனால் அனுஷியாவின் நண்பா்கள் பள்ளி தோழா்கள் ஊா் மக்களிடம் போலீஸ் விசாாித்தால் உண்மை தொிந்து விடும். எனவே போலீசாா் உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டியிருக்கிறாா்கள். சமூக ஊடகத்தில் இது வைரலாக பரவியிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் இதை மையமாக வைத்து தற்கொலை வழக்கை மீண்டும் விசாாிக்க இருப்பதாகவும் கூறுகின்றனா்.

Investigation Kanyakumari police
இதையும் படியுங்கள்
Subscribe