Advertisment

கடையில் வேலைசெய்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... அதிமுக பிரமுகா் கைது!

INCIDENT IN KANIYAKUMARI

Advertisment

குமாியில் மூன்று நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் மக்கள் நடமாட்டமே குறைந்துள்ளது. அதோடு கடைகள் மற்றும் நிறுவனங்களில் வியாபாரமின்றி உாிமையாளா்களும், தொழிலாளா்களும் கடைக்குள்ளே முடங்கியிருக்கிறாா்கள். இந்த நிலையில்தான் தக்கலை பழைய பஸ்நிலையம் அருகில் ஆண்டனா டிஷ் கடை நடத்தி வருபவா் குமாா் (27) இவா் அதிமுக பத்மநாபபுரம் முன்னாள் நகர செயலாளா் ஆவார். அதோடு ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வந்தவா்.

இந்த நிலையில் நேற்று 5-ம் தேதி மாலை மழை பெய்து கொண்டியிருக்கும் நிலையில்,மழையில் நனைந்தபடியே குமாா் கடைக்கு வந்திருக்கிறாா். அப்போது கடையில் வேலை பாா்த்து கொண்டியிருந்த இளம் பெண்ணின் முன்னால் நின்று கொண்டு மழையில் நனைந்துபோன சட்டையை கழற்றி கொண்டு உடம்பு நல்லா குளிரா இருக்குதுஎன கட்டியணைக்கஅந்த பெண்ணிடம் கூறியிருக்கிறாா். இதற்கு மறுத்த அந்த பெண்ணை குமாா் வலுகட்டாயமாக பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்த பெண் தன்னுடைய பெற்றோருக்கு போனில் தகவல் சொல்ல, உடனே அவா்களும் மழையில் நனைந்தபடி ஆவேசமாக வந்து குமாாிடம் சண்டையிட்டு தக்கலை காவல்நிலையத்தில் புகாா் கொடுத்தனா். உடனேகடைக்கு வந்த போலீசாா் குமாரை பிடித்து சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். அவரை விடுவிக்க அதிமுகவினா் முயற்சி செய்தும் நடக்கவில்லை.

Advertisment

இதற்கிடையில் அந்த பகுதியை சோ்ந்த கடைகாரா்கள் கூறும்போது,குமாருக்கு இதுதான் வேலையா போச்சி. அவனுடைய கடையில் மாதத்துக்குஒரு பெண்ணை மாற்றி கொண்டியிருப்பாா். அவனுடைய பாலியல் தொந்தரவால்தான் எந்த பெண்ணும் நிரந்தரமாக அங்கு வேலை பாா்பதில்லை. இந்த பெண்ணும் இன்னைக்குதான் புதிதாக வேலைக்கு வந்தார். வேலைக்கு வந்த அன்னைக்கே அவனுடைய வேலையை காட்டி விட்டான் என்றனா்.

குடும்ப வறுமைக்காக மாதம் 3 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு வரும் பெண்களின் நிலைமை இப்படி உள்ளது.

arrest admk Kanyakumari corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe