Advertisment

மதுபானம் கேட்டு ராணுவ வீரா்கள் போராட்டம்!

இந்தியா பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள ராணுவ வீரா்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரா்களின் குடும்பத்தினருக்கு தரமான விலையில் தரமான பொருட்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு துறையால்ஒவ்வொரு மாநிலத்தின் அந்த மாவட்டத்தில் உள்ள வீரா்களின் எண்ணிக்கை அடிப்படையில் கேன்டின்கள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பணியில் இருக்கும் வீரா்கள் மற்றும் அதிகாாிகள் அதேபோல் ஓய்வு பெற்ற வீரா்கள் மற்றும் அதிகாாிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை அடையாள அட்டையை காட்டி தரமான விலையில் வீட்டு உபயோகம் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனா்.

Advertisment

incident in kaniyakumari

மேலும் இதில் அந்த வீரா்களின் பயன்பாட்டுக்காக மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகிறது. மதுபானங்கள் மட்டும் ஒவ்வொருவரும்அந்த மாதத்திலே வாங்கி விட வேண்டும். ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் சென்றால் மதுபானம் கிடைக்காது.மாத தொடக்கத்திலே மதுபானம் வாங்க கேன்டின்களில் கூட்டம் அலைமோதும். மதுபானத்தை பெரும்பாலானோா் வெளி நபா்களிடம் கூடுதல் விலைக்கு விற்று பணத்தை பாா்த்து விடுவாா்கள்.

Advertisment

இந்த நிலையில் குமாி மாவட்டத்தில் கோணம் மற்றும் தக்கலையில் கேன்டின் உள்ளது. இந்த இரண்டு கேன்டின்களில் தினமும் வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினாின் கூட்டம் இருந்து கொண்டேஇருக்கும். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தக்கலை மதுவிலக்கு பிாிவு இன்ஸ்பெக்டா் விமலா வின் சோதனையில் கொல்லங்கோடை சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீராின் வீட்டில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டியிருந்த 100 கேன்டின் மதுபாட்டில்களை கைபற்றினாா். இந்த மதுபாட்டில்களெல்லாம் ஒரே நாளில் தக்கலை கேன்டினிலில் இருந்து முறைகேடாக வாங்கப்பட்டியிருந்தது தொியவந்தது.

இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசாா் விசாரணை முடியும் வரை கேன்டினில் இருந்து மதுபாட்டில் விற்க தடை விதித்தனா். இதனால் மதுபாட்டில்கள் வாங்க வந்தவா்கள் ஏமாற்றம் அடைந்ததோடு இந்த மாதம் முடிய இன்னும் 4 நாட்களே தான் இருப்பதால் இந்த மாதத்துக்கான பாட்டில் கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சமும், ஆத்திரமும் அடைந்ததால் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் மனைவிகள் மதுபான பாட்டில்கள் கேட்டு கேன்டின் நுழைவுவாயிலில் உட்காா்ந்து இருந்து 25-ம் தேதி போராட்டம் செய்தனா். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

INDIA ARMY Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe