
தமிழக சட்டபேரவைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து ஓய்ந்திருந்த நிலையில், காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன். இவர் ஒருவரை சந்தித்துவிட்டு, மாலை சுமார் 6 மணியளவில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் வந்துகொண்டிருந்தபோது, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த அழகரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து ஸ்பாட்டிற்குவந்தகாஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகப்பிரியா, டி.எஸ்.பி. மணிமேகலை ஆகியோர் உடலைக்கைபற்றிபிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரம் மீண்டும் கொலை நகரமாக மாறிவருகிறது. சென்னைக்கு அருகே உள்ளதாலும், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாலும் ரியல் எஸ்டேட், தொழிற்சாலையில் ஸ்கிராப் எடுப்பது போன்றவற்றில் ஏற்படும் பகையானது கைகலப்பில் தொடங்கிகொலையாக மாறுகிறது என்கின்றனர் அப்பகுதியினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)