Advertisment

பட்டப்பகலில் கடைவீதியில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவன் கைது!

incident in kallakurichy

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மணலூர்பேட்டை. இங்குள்ள பேக்கரி கடையில் வேலை செய்த மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். வயது 45 இவரது மனைவி விஜயா வயது 37 இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விஜயா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று வீட்டு வேலை செய்த நிலையில்கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஊருக்குத் திரும்பியுள்ளார். இதன் பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

kallakurichi

Advertisment

மனைவி விஜயா மீது சரவணன் சந்தேகமடைந்துள்ளார் எனவே இருவருக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு விஜயா தன் தாயாருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மணலூர்பேட்டையில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில்சரவணன் அடிக்கடி வந்து மனைவி விஜயாவை சேர்ந்து வாழ்வதற்கு தன்னோடு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் கணவருடன் செல்ல விஜயா மறுத்து வந்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த சரவணன் நேற்று முன்தினம்மணலூர்பேட்டையில் விஜயா வேலைசெய்த பேக்கரி கடைக்குச் சென்று தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். அப்போதும்விஜயா மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன் கையில் தயாராக வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.இதனால் ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துள்ளார்.

incident in kallakurichy

இதனைப் பார்த்த பொதுமக்கள் பயந்து மிரண்டு ஓடியுள்ளனர்.தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய விஜயாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் தானே உளுந்தூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்தார்.அவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் எனது மனைவி விஜயா வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய பிறகு அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த நிலையில் சேர்ந்து வாழ வருமாறு விஜயாவை அழைத்தபோது வர முடியாது என்று மறுத்து வந்தார். இந்த கோபத்தினால் அவரை கத்தியால் குத்தினேன் என்று சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து போலீசார்சரவணனை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு நீதிமன்றம் மூலம் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்தச் சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police incident kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe