கள்ளக்குறிச்சியில்காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிறுமிகள் இருவர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சிமாவட்டம், குலமங்கலத்தில் வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருந்த காரில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் இரண்டு சிறுமிகள் காருக்குள் உள்ளே சென்று கதவை சாத்தியபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் கதவு லாக் ஆனதால் உள்ளே இருந்த சிறுமிகள் இருவரும் வெளியே வரமுடியாமல் போராடி வந்துள்ளனர். 2 மணி இரண்டு மணி நேரமாக காருக்குள்ளேயே சிக்கி இருந்த அந்த இரண்டு சிறுமிகளும் மூச்சுத்திணறி காருக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் இருவர் காருக்குள் மூச்சுத் திணறி இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.