incident in kallakurichi sangarapuram

சமீப நாட்களாக பெய்துவரும் தொடர் மழை ஒரு பக்கம்.அதேபோல் மழை இல்லாத நேரங்களில் கடும் பனிப்பொழிவு ஒருபக்கம். கடும் குளிர் மனிதர்களையும் அவர்கள் வளர்க்கும் ஆடு மாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள பாவலம் கிராமத்தில் 600 ஆடுகள்இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாவலம் கிராமத்தைச்சேர்ந்தவர் பழனி கருத்த பிள்ளை. இவர்கள்பரம்பரை பரம்பரையாக ஆடுகள் வளர்ப்புத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களின் போது ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்வது வழக்கம்.இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார்கள். இதற்காகவே வெயில், மழை பாராமல் காடு மேடெல்லாம் திரிந்து ஆடுகளை மேய்த்து வளர்த்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினம் (08/01/2021) பாவலம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தங்களது சுமார் 600 ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தனர். சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (08/01/2021) பெய்த பலத்த மழையின் காரணமாக முசுகுந்த ஆற்றின் கரை ஓரப்பகுதியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள்வெள்ள நீரில் அடித்துச் சென்றன. மீதி இருந்த சுமார் 500 ஆண்டுகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்தன. நேற்று காலையில் சென்று ஆடுகள் இறந்து கிடந்ததைப்பார்த்து அதன் உரிமையாளர் பழனி கருத்த பிள்ளை கதறி அழுதார்.இந்தத்தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.

Advertisment

அதேபோல், இதை அறிந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு ஆடுகளை வளர்த்தவர்களைச்சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அதிகாரிகளிடம் அவர்களுக்கான உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.