
கள்ளக்குறிச்சி அருகே காதலித்ததாககூறப்படும் பிளஸ் டூமாணவனும், மாணவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தலை பகுதியில் மாணவனும், மாணவியும் பிளஸ் டூஒரே வகுப்பில் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இவர்கள் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இருவரும் ஊரிலிருந்து மாயமாகி உள்ளனர். மாயமான இருவரையும் மாணவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இறுதிக்கட்டமாக போலீசாரிடம் புகார் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சோமண்டார்குடி ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் மாணவியின் சடலமும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இருவரும் இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில் இது கொலையா தற்கொலையா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)