INCIDENT IN KALLAKURICHI

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ளது கீழாத்துக்குழி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரது மகன் ஈஸ்வரன் (30).இவருக்கு ரேவதி (25) என்ற மனைவியுள்ளார்.இந்தத் தம்பதிக்கு,5 வயதில் புஷ்பா, 2 வயது யமுனா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ரேவதி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஈஸ்வரனின் அண்ணன் மகேந்திரன், அவரின்மனைவிஅலமேலு. இவர்களுக்கு,கதிரேசன், கேசவர்த்தினி என இரு பிள்ளைகள்உள்ளனர். மகேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் கும்பலுடன் செல்லும்போது நடந்த கார் விபத்து தீயில் கருகி பலியாகியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, அவரது மனைவி அலமேலுவை ஈஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள் ஒன்று கூடி ஊர் பஞ்சாயத்தில் பேசி முடிவு செய்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ரேவதி நேற்று முன்தினம் மாலை, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் காலை வரை அவரும் குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் ரேவதியும் குழந்தைகளும் கிடைக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில், நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே ரேவதியின் செருப்பு கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், சந்தேகம் அடைந்துள்ளனர். உடனே கிணற்றில் இறங்கித் தேடியுள்ளனர். அந்தக் கிணற்றில் ரேவதி, புஷ்பா, யமுனா ஆகிய மூவரின் உடல்களும்கிடந்துள்ளன. மூன்று உடல்நிலையும் உடனடியாக வெளியே கொண்டு வந்தனர்.

cnc

இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்துபோன மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதுகுறித்து, கரியாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு குழந்தைகள்மற்றும்ஒரு கர்ப்பிணிப் பெண் இறந்து போன சம்பவம் கல்வராயன் மலைப் பகுதி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.