Advertisment

நிலத்தைச் சமன் செய்துகொண்டிருந்த ஜே.சி.பி கொழுந்து விட்டு எரிந்த சம்பவம்!

incident of JCB burning while leveling the land

கிருஷ்ணகிரி மாவட்டம் கதவணி பகுதியைச் சேர்ந்தவர்சோனாச்சலம். இவரின்மகன் சிவராமன்(38). இவருக்கு சொந்தமாகரூ.20 லட்சம் மதிப்பிலான ஜேசிபி உள்ளது. இவர் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஜொள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் அளவிலான நிலத்தை சமன் செய்ய வந்துள்ளார். நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தபோது ஜேசிபியில் இருந்த பேட்டரியின் மூலம் மின்கசிவு ஏற்பட்டு டீசல் டேங்க் மற்றும் சக்கரத்தில் தீ பற்றி தகதகவென கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

Advertisment

இது குறித்து சிவராமன் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் ஜேசிபி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் எலும்பு கூடாக காட்சியளித்தது. இந்தச் சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

நிலத்தை சமன் செய்ய சென்ற இடத்தில் ஜேசிபியில் இருந்த பேட்டரியில்மின் கசிவு காரணமாக ஜேசிபி எரிந்து நாசமான சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

farmland JCB police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe