தமிழகத்தில் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனாபாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் வாங்கி மட்டுமேபயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருவள்ளூரில் இ-பாஸ் வாங்கி தருவதாக ஏமாற்றிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரில் திருப்பதி செல்லஇ-பாஸ் வாங்கி தருவதாகக்கூறி சதீஷ் குமார் என்பவரிடம் 25 ஆயிரம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இ-பாஸ் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக ஜெகதீஷ்,தினேஷ் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.