Skip to main content

பரிசலில் தனியாக வந்த பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; பரிசல்காரர் கைது!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

incident in hogenakkal

 

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி அமுதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

 

கடந்த 15ம் தேதி, அமுதாவின் தாயார் நினைவு நாள் என்பதால், ஒகேனக்கல்லில் வசிக்கும் அமுதாவின் தங்கை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதற்காக, கடந்த 14ம் தேதி கொள்ளேகாலில் இருந்து மாறுகொட்டாய் வந்த அமுதா, பரிசலுக்காக நின்று கொண்டிருந்தார்.

 

அங்கிருந்த ஒரு பரிசலில் ஏறி அவர் ஒகேனக்கல் பரிசல் துறைக்கு வந்தார். அப்போது, தனியாக வந்த அவரை, பரிசல் ஓட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரை அழைத்துச் செல்ல, அவருடைய தங்கை மற்றும் அவருடைய கணவர் ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்த பரிசல் ஓட்டி, அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அமுதாவை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

இதுகுறித்து ஒகேனக்கல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய பரிசல் ஓட்டியைத் தேடி வந்தனர். தீவிரத் தேடுதலுக்குப் பின்னர் பரிசல் ஓட்டி மூர்த்தியை வியாழக்கிழமை (டிச. 17) காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், பரிசல் சவாரியை விரும்பும் பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்