Skip to main content

15 வயது சிறுவர்களுடன் நெருக்கம்... கொலையில் முடிந்த வாட்ஸ்அப் சாட்டிங்.... கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!!

indiraprojects-large indiraprojects-mobile

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த கல்லுரி மாணவி ஒருவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

 

 The incident happened in Watts App chatting ...

 

கடந்த வியாழக்கிழமை உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது சித்தி பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மாணவி உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

 

இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட கொலை என அவரது சித்தி கூறியுள்ள நிலையில், மாணவியை தேடி சென்றபோது அந்த கிணற்றிற்கு அருகில் இரண்டு போதை ஆசாமிகள் நின்றிருந்தாகவும் இது குறித்து கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

 

 The incident happened in Watts App chatting ...

 

 

இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாராய்வுக்கு வைக்கப்பட்டது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லாத நிலையில்  உடற்கூறாராய்வுக்கு பின்தான் இது கொலையா இல்லை தற்கொலையா என தெரியவரும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

 

 The incident happened in Watts App chatting ...

 

சம்பந்தப்பட்ட மாணவி எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பார் என்றும், வாட்ஸ்அப்பில் நண்பர்களுடன் உரையாடுவது வழக்கம் என்றும் சம்பவத்தன்று வீட்டில் வாட்ஸ் அப்பில் நீண்ட நேரம் சாட்டிங் செய்துகொண்டிருந்தை அவரது சகோதரர் கண்டித்து திட்டியதால் வீட்டை விட்டு மாணவி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.  

 

 

இதனைத்தொடர்ந்து மாணவியின் செல்போனை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் உள்பட 5 பேரிடம் அதிக நேரம் வாட்சப் சாட்டிங்கில்  ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். 

 

 The incident happened in Watts App chatting ...

 

அந்த செல்போனில் இருந்து பல செல்பி புகைப்படங்களையும் போலீசார் கைப்பற்றி இந்த சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் சித்தி பிடித்து கொடுத்த ராஜி, வல்லரசு என்ற இரண்டு இளைஞர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இது கொலை என்ற அதிர்ச்சி வெளியானது.

 

அதே ஊரை சேர்ந்த ராஜி என்ற இளைஞன் மாணவியிடம் வாட்சப் சாட்டிங்கில் பேசி மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இடையில் அவன் கம்பி கட்டும் வேலைக்காக துபாய் சென்றுவிட மாணவி 15 வயது சிறுவர்கள் உட்பட 5 பேரிடம் நெருக்கமாக பழகி வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஒரு மாதம் கழித்து ஊர் திரும்பிய ராஜியுடன் மீண்டும் காதல் துளிர்த்துள்ளது.

 

 The incident happened in Watts App chatting ...

 

இதனால் மீண்டும் பழையபடி நேரம்காலம் பார்க்காமல் வாட்சப் சாட்டிங்கில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 15 வயது சிறுவனுடன் மாணவி மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ராஜி கையில் கிடைக்க அதை பெரிதுபடுத்தாதுபோல் பேசிவந்துள்ளான் ராஜி.

 

murder

 

சம்பவத்தன்று தனிமையில் சந்திக்கலாம் என்று மாணவி கூற இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜி சந்திக்க ஒத்துக்கொண்டு தோட்டத்திற்கு வர சொல்லியத்தின் பேரில் அங்கு சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான் ராஜி. அவன் மட்டுமின்றி மது வாங்கி தருவதாக வல்லரசு என்ற கூட்டாளியையும் கூட அழைத்து வந்த ராஜு உன்னை  திருமணம் செய்துகொள்வதாக இருந்தேன் ஆனால் நீ 15 வயது சிறுவர்களுடன் பழகியுள்ளாய் என சுட்டிக்காட்டி உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி எல்லை மீறியுள்ளான். 

 

இதனைக்கேட்ட மாணவி  தன்னை ஏமாறிவிட்டதை உறவினர்களிடம் சொல்லிவிடுவேன் என கூற ராஜியும் அவனது கூட்டாளி வல்லரசும் சேர்ந்து மாணவியை கிணற்றில் தள்ளிவிட்டு அங்கேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்தசம்பவம்  கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...