சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!

Incident happened to Serial actress Chitra's father

சின்னத்திரை நடிகையான சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக, நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஒய்வுபெற்ற காமராஜ், தனது மகள் சித்ரா இறந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

father incident
இதையும் படியுங்கள்
Subscribe