Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

Incident happened to seizing raja for amstrong case

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தொடர் கைதுகள் நடைபெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

ரவுடிகள், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் என இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (21-09-24)இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Advertisment

ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடி குண்டுகளை சப்ளை செய்தவர் ரவுடி அப்பு என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்து அவரை தேடி வந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் கடப்பாவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை நேற்று (22-09-24) தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட இந்த நிலையில், இன்று (23-09-24) போலீசாரால் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார். பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற போலீசார், சீசிங் ராஜாவை அழைத்துச் சென்றனர். அப்போது, சீசிங் ராஜா போலீசாரை தாக்கி விட்டு, தான் வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த போலீசார் வாகனத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்ப முயன்றார். இதனால், தனது தற்காப்புக்காக சீசிங் ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கெனவே என்கவுன்டரால் கொலை செய்யப்பட்ட திருவேங்கடத்தை தொடர்ந்து, தற்போது சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டார்.

சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ள நிலையில், என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜா, 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு, சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு, திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜியை தொடர்ந்து தற்போது மூன்றாவது என்கவுன்டராக சீசிங் ராஜா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Chennai police encounter amstrong
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe